குடியிருப்பு பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள். 
உள்ளூர் செய்திகள்

தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் கிராமமக்கள் அச்சம் - சீரமைக்க கோரிக்கை

ராராமுத்திரகோட்டையில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் கிராமமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அம்மாபேட்டை:

தஞ்சை மாவட்டம்  பாபநாசம் தாலுக்கா,  ராராமுத்திர கோட்டை ஊராட்சியில் ஆதிதிராவி டர்தெரு பகுதியில் உள்ள ஆலமரம்அருகே மின்கம்பிகள் மரக்கிளை களுக்கு இடையே செல்வ தால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. 

அதுபோல வையாபுரி தோப்பு பகுதியில் குடியிருப்புகளுக்கு மேலே  செல்லும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வ தாலும் மரங்கள் அடர்ந்த தோப்பு வழியாக மின்கம்பிகள் செல்வதால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும்.

தாழ்வாக செல்லும் மின்க ம்பிகளால் மின்வி பத்து ஏற்பட்டு உயிர்பலி ஏற்படுமோ என்ற  அச்சத்தில் கிராமமக்கள் இருந்து வருகின்றனர். எனவே உயிர்பலி ஏற்படும் முன்பு  மின் வாரியம்  மின்கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டுமென கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.