தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிராங்குடி பஞ்சாயத்து தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாயத்துக்களின் முன்னேற்றத்திற்கு துறைகளை ஒருங்கிணைப்பதை வேளாண்மை உதவி அலுவலர் ஒருங்கிணைப்பு அலுவலராக செயல்படுவார். அனைத்து துறைகளும் தங்களது திட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட பஞ்சாயத்துக்களில் அதிக முன்னுரிமை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தோடு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும் கிராமத்து விவசாயிகள் தன்னிறைவு அடையத் தக்க வகையிலும் விவசாயிகளின் தேவை-யறிந்து பணியாற்ற முனைப்-புடன் செயலாற்ற அறிவுறுத்-தப்பட்டுள்ளது.
எனவே அனைத்து துறைகளும் தங்களது திட்டங்களை செயல்-படுத்துவது மிகவும் எளி-தாகும். எனவே விடுபாடு இன்றி அனைத்து விவசாயிகளும் தங்கள் விபரங்களை பதிவு செய்து தங்களுடைய முன்னேற்-றத்துக்கும் பஞ்சாயத்தின் முன்னேற்றத்துக்கும் தேவையான கருத்-துக்களையும் கூட்டங்களில் தெரிவித்து பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட சிராங்குடி பஞ்சாயத்தில் மேலாண்மை குழு கூட்டம் வேளாண் அலுவலர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட மகளிர் குழு உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து-கொண்டு பதிவு செய்து அடிப்படை விவரங்கள் பதிவிற்கான படிவத்தையும் பெற்றுச் சென்றனர்.