பாபநாசம்;
பாபநாசம் ஒன்றியம் ராஜகிரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சமீமா பர்வீன் முபாரக் உசேன் தலைமையிலும், கோபுராஜபுரம் ஊராட்சி யில் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமையிலும், பண்டா ரவாடை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மரியம் பீவி தலைமையிலும், ரெகுநாதபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர் தலைமையிலும், சரபோஜிராஜபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பூமா சண்முகம் தலைமையிலும் உள்பட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பொது–மக்களிடையே பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்கள் பெறப்பட்டது. கிரா–மத்தினை பசுமையாக, தூய்மையாக வைத்திரு–ப்பதற்கும், கிராமத்தின் நீர் மேலாண்மை, குடிநீர் வினியோகம் சிறப்பாக செயல்படுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதில் பாபநாசம் ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி கண்ணதாசன், ஒன்றிய குழு துணை தலைவர் தியாக பழனிசாமி, பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் காந்திமதி, கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் பாபு, மாவட்ட கவுன்சிலர்கள் தாமரைச்செல்வன், பாத்திமா ஜான், பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற துணை தலைவர்கள், அனைத்து துறை அரசு அலுவலர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.