பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் புனித வார நிகழ்வுகளின் நிகழ்ச்சியாக புனித வியாழன் நேற்று இரவு நடைபெற்றது.
பூண்டி மாதா பேராலய அதிபர் பாக்கியசாமி-தலை-மையில் இறை வார்த்தை வழிபாட்டுடன் புனித வியாழன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உதவி அதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியாகதுருகம்
இயக்குநர் சாம்சன், உதவி பங்குத்தந்தை யர்கள் ஜான்சன், இனிகோ, ஆன்மிக தந்தை அருளாந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். புனித வியாழன் நாளின் சிறப்பு குறித்து பேராலய அதிபர் பேசினார்.
அதன்பின்னர் இயேசு நாதர் சிலுவையில் அறையப்படுவதற்கு முதல்நாளில் தனது சீடர்களின் கால்களை கழுவியதை நினைவுகூறும் விதமாக பேராலய அதிபர் பாக்கியசாமி தேர்ந்து எடுக்கப்பட்டு
பேராலயத்தில் அமர வைத்து இருந்த 12 பேரின் கால்களை கழுவி--னார். இதன்பின்னர் நற்கருணை இடமாற்ற பவனி நடந்தது. நற்கருணை-இடமாற்-றத்திற்கு பின்னர் நள்ளிரவில் வரை சிறப்பு
பிரார்த்தனை நடைபெற்றது.இன்று (வெள்ளி) இயேசு நாதர் சிலுவையில் அறையப்பட்டநாள் அனுசரிக்கப்பட்டது.
நாளை (சனிக்கிழமை) இரவு ஈஸ்டர் தின சிறப்பு திருப்பலி நள்ளிரவு நடைபெற உள்ளது.