தஞ்சாவூர்:
தஞ்சாவூர் நகரின் மையப் பகுதியில் செல்லும் கல்லணை கால்வாய் என்னும் புது ஆறு செல்கிறது . காந்திஜி சாலை வழியாக செல்லும் இந்த ஆற்றின் குறுக்கே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இர்வின் பாலம் கட்டப்பட்டது.
இதையடுத்து தற்போது பாலத்தை அகலப்படுத்தி நான்கு வழி சாலையாக அமைக்க பழைய பாலத்தை இடித்துவிட்டு ரூ.3 கோடி செலவில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
பாலம் கட்டுமான பணி தொடங்கியதால் காந்திஜி சாலையில் ஆத்துப்பாலம் முதல் அண்ணா சாலை வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது .இந்த சாலையின் வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகம் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது.
அதேபோல் கிழக்குப்பகுதியில் கீழவாசல் பகுதியாக திருப்பி விடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதையடுத்து பழனிமாணிக்கம் எம்.பி. உத்தரவின்படி கல்லணை கால்வாய் ஆற்றில் தற்காலிக தரைப்பாலம் அமைக்கும் பணி இன்று காலை தொடங்கியது. இன்று மாலை முதல் தற்காலிக தரைப்பாலத்தில் போக்குவரத்து அனுமதிக்கப்பட உள்ளது என நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.