பாராட்டு சான்றிதழ் பெற்ற கைரேகை பிரிவு போலீசார் 
உள்ளூர் செய்திகள்

கைரேகை பிரிவு போலீசாருக்கு தஞ்சை சரக டி.ஐ.ஜி. பாராட்டு

சிறப்பாக துப்பு துலக்கி திருட்டுப் பொருட்கள் மீட்ட கைரேகை பிரிவு போலீசாரை தஞ்சை சரக டி.ஐ.ஜி. பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

மாலை மலர்

தஞ்சாவூர்:

தஞ்சையில் நடந்த பல்வேறு குற்றச்செயல்களில் சிறப்பாக பணியாற்றி துப்பு துலக்கி திருட்டு பொருட்களை மீட்ட கைரேகை நிபுணர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

தஞ்சை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காவல்துறையில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை தஞ்சை சரக டி.ஐ.ஜி கயல்விழி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா ஆகியோர் வழங்கினர்.  

அந்த வகையில் தஞ்சை மாவட்ட வெவ்வேறு போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்த  திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் காணவும், கொள்ளை போன பொருட்களை மீட்கவும் சிறப்பாக பணியாற்றிய கைரேகை பிரிவை சேர்ந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (வி.ரே) ஹேமா, சப்-இன்ஸ்பெக்டர்கள் (வி.ரே) அமலா, கீதா, கார்த்திக், சங்கவி, சிலம்பரசன் ஆகியோரையும் சரக டி.ஐ.ஜி கயல்விழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா  பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.