கோப்புப்படம். 
உள்ளூர் செய்திகள்

மினி பஸ் ஊழியருக்கு அரிவாள் வெட்டு

கும்பகோணத்தில் மினி பஸ் டிரைவர், கண்டக்டரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மாலை மலர்

கும்பகோணம்:

கும்பகோணத்திலிருந்து தாராசுரம் அருகில் உள்ள எலுமிச்சங்கா-பாளையம் என்ற இடத்திற்கு மினி பஸ் நேற்று மாலை சென்று கொண்டிருந்தது.

பேருந்தின் நடத்துனராக வினோத் (25) என்பவரும் ஓட்டுனராக வசந்த் (24) என்பவரும் பணியாற்றி வந்தனர்.

பேருந்தில் ஏறிய ஒரு நபர் தாராசுரம் பஸ் நிலையத்திற்கு முன்னதாக இறங்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த இடத்தில் பஸ் நிற்காது என ஓட்டுனரும் நடத்துனரும் தெரிவித்துள்ளனர்.

ஏன் பஸ் நிற்காது எனக் கூறி பஸ்ஸின் ஸ்டியரிங்கை மர்ம நபர் திருப்பியதுடன், பஸ் சாவியையும் பிடுங்கி உள்ளார். பஸ்ஸின் ஓட்டுநர் சாமார்த்தியமாக பஸ்ஸை நிறுத்திவிட்டு சாவியை

பிடுங்கிய நபரை விரட்டி சென்றுள்ளார். தப்பி ஓடிய நபர் தனது நண்பர்களுக்கு போனில் தகவல் கொடுத்து வரவழைத்துள்ளார்.

பஸ் எலுமிச்சங்காபாளையம் வருவதற்குள் பஸ்ஸை தடுத்து நிறுத்தி நண்பர்கள் கொண்டுவந்த அரிவாளால் ஓட்டுனர் மற்றும் நடத்துனரை அந்த நபர் வெட்டி உள்ளார்.

இதில் ஓட்டுனருக்கு கையில் காயம் ஏற்பட்டளது.

அந்த நபர் தாக்கியதால் நடத்துனருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த இருவரும் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்தில் இருந்த காமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு கும்பகோணம் தாலுகா போலீசார் விசாரணை மேந்கொண்டனர்.

இதில் அந்த நபர் கும்பகோணம் கர்ணக்கொல்லை தெருவை சேர்ந்த ரகுராமன் மகன் ஹரி என்பது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாக உள்ள ஹரியை தீவிரமாக தேடி வருகின்றனர்.