பாபநாசம்:
பாபநாசம் புதிய பஸ் நிலையம் அருகில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வசதியாக கம்ப்யூட்டர் பயிற்சி பெறும் மையத்தினை வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பாபநாசம் சீனிவாச பெருமாள், இரட்டை பிள்ளையார், ஆஞ்சநேயர் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். மேலும் கோவிலுக்கு பின்புறம் உள்ள குடமுருட்டி ஆற்றுக்கு சென்று பார்வையிட்டார்.
பின்பு பாபநாசம் தெற்குமட வளாகத்தில் அமைந்துள்ள அவரது பிறந்த வீட்டிற்கு வருகை புரிந்தார். அங்கு அவரை திரளான பக்தர்கள் சந்தித்தனர்.
அப்போது அவர் கூறும்போது:-
கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வசதியாக பாபநாசத்தில் கம்ப்யூட்டர் பயிற்சி பெறும் வசதி எங்களது அமைப்பின் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. பாபநாசத்தில் உள்ள ஆறுகள், குளங்கள், வாய்க்கால்கள் தூய்மைப்படுத்தி
தூர்வார வேண்டும் என்றார்.