கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

கோயில் நிலங்களில் குடியிருப்போர் முற்றுகைப் போராட்டம்

சென்னையில் 18-ந் தேதி கோயில் நிலங்களில் குடியிருப்போர் முற்றுகைப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மாலை மலர்

கும்பகோணம்:

தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்க மாவட்ட அமைப்பாளர் சா. ஜீவபாரதி தெரிவித்ததாவது

தமிழ்நாடு முழுவதும் கோயில் இடங்களில் நீண்டகாலமாக குடியிருப்பவர்கள், விவசாய நிலங்களில் குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகள், சிறு கடை வைத்திருப்பவர்களுக்கு வாடகை மற்றும் குத்தகை நிர்ணயிக்கிறோம் என்ற பெயரில் பல மடங்கு வாடகை கடந்த காலத்தில் அறிவிக்கப்பட்டது பயனாளிகள் கட்ட முடியாத அளவிற்கு உயர்த்தப்பட்ட வாடகையை குறைத்திட வேண்டும் என பல போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் தற்போது பொறுப்பேற்றுள்ள திமுக அரசு மேலும் பரம்பரை பரம்பரையாக அனுபவத்தில் இருந்து கோயில் நிலங்களில் பயன்படுத்தி வரும் பயனாளிகளை புதிய சட்டத்தின் மூலம் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி அப்புறப்படுத்த முடிவெடுத்துள்ளது

மேலும் தஞ்சை முதல் விக்கிரபாண்டியம் வரை சாலை விரிவாக்கம் சுமார் 

35.17 கோடி ரூபாயில் விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இப்பணியினால் காலம் காலமாக குடியிருந்து வரும் ஏழை தொழிலாளர்கள் மற்றும் கடை வைத்திருப்போர் அதிரடியாக சாலைவிரிவாக்கப் பணியின்போது அவசர அவசரமாக அப்புறப்படுத்தி சாலைகள் பணி நடைபெற்று வருகிறது.

ஆனால் அப்புறப்படுத்தப்பட்ட காலகலமாக இருந்தமக்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்காமல் கோயில் மற்றும் மடத்திற்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது இந்நிகழ்வு கோயில் மடம் இடத்தில் குடியிருப்போர் மத்தியில் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது ஆகையால் உடனடியாக கோயில் மடம் இடத்தில் குடியிருந்தவர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.

இது சம்பந்தமாக நீண்ட காலமாக கோயில் இடங்களில் குடியிருக்கும் குத்தகை சாகுபடி செய்யும் சாதாரண ஏழை எளிய பயனாளிகளை அச்சுறுத்தும் அறநிலைத்துறை நடவடிக்கையை கண்டித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் 18.3.22 வெள்ளிக்கிழமை இந்து சமய அறநிலைததுறை ஆணையர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் நடைபெறும் மாபெரும் முற்றுகை போராட்டத்தில் திருப்பனந்தாள் பகுதியில் உள்ள கோயில் இடங்களில் குடியிருப்பவர்கள் பெரும் திரளாக கலந்து கொள்ள ஏற்பாடு செய்து முடிவெடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.