பாபநாசம்:
முன்னாள் எம்.பி. பாரதிமோகன் மத்திய ரெயில்வே அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை வழியான தஞ்சாவூர்-விழுப்புரம் ரெயில் பாதையை இரட்டை வழி பாதையாக மாற்ற வரும் நிதி ஆண்டிற்கான திட்ட வரைவில் அனுமதி வழங்க வேண்டும்.
திருச்சி ரெயில்வே கோட்டத்தில் பழமைமிக்க மெயின் லயன் பகுதியில் ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனை வசதி ஏற்படுத்தப்படவேண்டும்.
கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் அல்லது மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டி பராமரிப்பு பணிமனை வசதி ஏற்படுத்தவேண்டும். மும்பைக்கு நேரடி ரெயில் வசதி ஏற்படுத்த வேண்டும்.
மயிலாடுதுறையில் இருந்து நேரடியாக பழனி, செங்கோட்டை, தூத்துக்குடி, போடிநாயக்கனுர் ஆகிய பகுதிகளுக்கும், மயிலாடுதுறை-குருவாயூர் (வழி: பழனி, பொள்ளாச்சி), புதுச்சேரி-கொல்லம் (வழி கும்பகோணம், மதுரை, ராஜபாளையம்), தாம்பரம்-தூத்துக்குடி (வழி: மயிலாடுதுறை, கும்பகோணம், மதுரை) மற்றும் மயிலாடுதுறை-போடிநாயகனுர் (வழி: திண்டுக்கல், மதுரை) ஆகிய தடங்களில் புதிய ரெயில் வண்டிகள் அறிமுகப்படுத்தப்படவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.