கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

ஆசாரி மர்ம சாவு

பட்டுக்கோட்டையில் ஆசாரி உயிரிழந்ததில் மர்மம் இருப்பதாக கூறி மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை வாண்டையார்புரத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 52) ஆசாரி. இந்நிலையில் ராமலிங்கம் மனைவி வித்யாவிற்கு, அவருடைய உறவினர் ராஜாத்தி என்பவர் போன் செய்து, பட்டுக்கோட்டையை அடுத்த சூரப்பள்ளம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உங்களுடைய கணவர் மயங்கி கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து வித்யா அங்கு சென்று பார்த்த போது அருகில் இருந்தவர்கள் ராமலிங்கத்தை பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றதாக தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் ராமலிங்கம் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து வித்யா பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் கணவர் இறப்பில் மர்மம் உள்ளதாக புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.