தஞ்சாவூர்:
தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆண்டிற்கு ஒருமுறை வரும் மகா சிவராத்திரியை கொண்டாடும் பக்தர்கள் அனைவருக்கும் தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் சார்பாக வணங்கி வாழ்த்துகிறோம்.
மகா சிவராத்திரி பற்றி சிறு குறிப்பாக சொல்வது என்றால் அண்டங்களும் இருக்கக்கூடிய அனைத்து உயிர்களும் ஒடுங்கி சிவபெருமானின் உள் அடக்கிய பிறகு அண்டத்தில் எங்கு திரும்பினாலும் வெறுமையாக காட்சியளித்தது. எந்த உயிரினங்களும் இல்லாமல் வெறும் காட்சி அளித்ததால் பார்வதிதேவி இதனை விரும்பாத காரணத்தினாலும் மீண்டும் உயிர்களின் ஜனனம் தோன்றிட வேண்டும் என்றும் கடுமையாக தவமிருந்து சிவனை நோக்கி வணங்கி அதில் வெற்றியும் பெற்று மீண்டும் இடங்களிலும் உயிர்கள் பிறந்து செழித்திட தவம் புரிந்த அந்த காலகட்டமே மகா சிவராத்திரி என்று கூறப்படுகிறது.
சிவராத்திரி அன்று பக்தர்கள் முழுமையாக விரதமிருந்து சிவ சிந்தனையிலேயே நிலைத்திருந்து சிவபெருமானே போற்றி சிவ தியானத்திலேயே இருந்து விரதம் அனுஷ்டிப்பவர்கள். ஆனால் அவர்கள் தங்கள் வாழ்வில் எந்தவொரு வேண்டுதல்களை கேட்கிறார்களோ அது மிகவும் இருக்கலாம் . அல்லது வேறு எந்த விதமாகவும் இருக்கலாம்.
அனைத்தும் நிச்சயம் நடந்தேறும் என்பது உண்மை. முழு நம்பிக்கையுடன் சிவராத்திரி விரதம் இருந்து பக்தர்கள் அனைவரும் தாங்கள் விரும்பிய அத்தனை பலன்களையும் அடைய வேண்டும். சுருக்கமாக கூற வேண்டும் என்றால் மேற்குறிப்பிட்ட விஷயங்கள் மட்டுமே உயிர்கள் மீண்டும் ஜனனம் என்ற காரணத்திற்காக தவமிருந்த பார்வதி தேவியின் அந்த நேரம் மகிமையே மகாசிவராத்திரி.
எனவே நாமும் மகாசிவராத்திரியன்று முழுமையாக தியானம் செய்து சிவ சிந்தனையிலேயே ஆழ்ந்து நமது லட்சியங்களையும் எண்ணங்களில் உள்ள விருப்பங்களையும் நிறைவேற்றிட மகா சிவராத்திரியை தவமிருந்து விரதம் இருந்து அனைத்து சவுபாக்கியங்களையும் பெறுவோம். பக்தர்கள் அனைவரும் மகா சிவராத்திரி விரதம் இருந்து மாபெரும் பலன்களை அடைய வேண்டும்.
நமது தேசிய திருக்கோ வில்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள், தன்னார்வலர்கள், சிவ பக்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி பூஜைகள் அனைத்தும் நடைபெற ஆவன செய்யும்படியும் பக்தர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களும் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். முக்கியமாக சிவராத்திரி அன்று பக்தர்கள் அனைவருக்கும் ருத்ராட்சம் தானமாக வழங்கும் படியும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.