கும்பகோணம்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23&வது தமிழ் மாநில மாநாடு மதுரையில் நடைபெறுவதையொட்டி விளம்பரம் செய்யப்பட்டு செங்கொடிகள் ஏற்றப்பட்டு வருகின்றன.
மாநில மாநாட்டை யொட்டி தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் பகுதியில் 5 மையங்களில் மாநில மாநாட்டை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் 23 சிபிஎம் கொடிகளை ஏற்றினர்.
இந்நிலையில் கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோவிலில் 23 கொடி களை ஏற்றி மாநாட்டு போர்டு வைக்கப்பட்டது.
இந்நிலையில் மர்ம நபர்கள் கொடிகளை பறித்து அருகில் உள்ள குளத்தில் வீசி உள்ளனர். பேனர்களையும் எடுத்துச் சென்றனர்.
இதனை அறிந்த கட்சியின் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிவேல் நாச்சியார்கோவில் போலீசில் இதுபற்றி புகார் அளித்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ரேகா ராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.