உழவாரப்பணி நடைபெற்றது. 
உள்ளூர் செய்திகள்

ஓதனவனேஷ்வரர் கோவிலில் உழவாரப்பணி

திருச்சோற்றுத்துறை ஓதனவனேஷ்வரர் கோவிலில் உழவாரப்பணி நடந்தது.

திருவையாறு:

திருவையாறு அருகே திருச்சோற்றுத்துறை ஓதனவனேஷ்வரர் கோயிலில் உழவாரப்பணி நடந்தது. 

சேலம் திரு அருணை உழவார திருக்கூட்டத்தினரால் மேற்கொள்ளப்பட்ட உழவாரப் பணியில் சுமார் 60 தொண்டர்கள் ஈடுபட்டனர். கோயில் வளாகம் மற்றும் தோப்பில் புதர்களையும் அகற்றினர்.

தோட்டம், நடைபாதைகள் மற்றும் பிரகாரங்களில் தூசுகளை அகற்றி சுத்தப்படுத்தினார்கள். 

மேலும், பூஜைக்கு பயன்படுத்தப்படும் வெண்கலம் மற்றும் பித்தளைப் பாத்திரங்களையும், அகல்விளக்குகள் மற்றும் சரவிளக்குகளையும் கழுவினர். பின்னர் மாலையில் நடந்த ஆராதனையில் கலந்துகொண்டு தேவாரம், திருவாசகம் பாடினர். 

உழவாரமும், தேவாரமும் வாழ்க்கையின் ஆதாரம் என்னும் அப்பர் பெருமானின் அறிவுறுத்தலின்படி சேலம் திரு அருணை உழவாரத் திருக்கூட்டத்தினர் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு சிவன் கோயிலுக்கும் விரும்பிச் சென்று உழவாரப்பணித் தொண்டு செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.