ஆணையரிடம் மனு அளித்தனர். 
உள்ளூர் செய்திகள்

மாலை நேர அங்காடிக்கு மின்வசதிக்கோரி மனு

தஞ்சை மாலைநேர அங்காடிக்கு மின்வசதி செய்து தரக்கோரி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர்:

தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமாரிடம்,  ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட தலைவர் சேவையா, தலைமையில் மாவட்ட துணை செயலாளர் துரை. மதிவாணன், சங்க நிர்வாகிகள்  பாலமுருகன், ரவி உள்ளிட்டோர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

தஞ்சாவூர் காவிரி சிறப்பங்காடி அருகில் உள்ள மாலை நேர காய்கறி அங்காடி சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.  

அங்கு நூற்றுக்கணக்கான சிறு வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். 

வியாபாரிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மின் வசதி ,கழிப்பிட வசதி, குடிநீர் வசதி செய்து தர வேண்டும். 

அத்துடன் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த  கடை வாடகை வசூலை மாநகராட்சி ஊழியர்கள் தினந்தோறும் வாங்கிக்கொண்டு ரசீது அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.