காட்டாற்று பாலத்தில் புதிய தார்சாலை போடப்பட்டது. 
உள்ளூர் செய்திகள்

பேராவூரணி காட்டாற்று பாலத்தில் புதிய தார்சாலை - வாகனஓட்டிகள் மகிழ்ச்சி

பேராவூரணி காட்டாற்று பாலத்தில் புதிய தார்சாலை அமைத்ததால் வாகனஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பேராவூரணி:

பேராவூரணியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் உள்ள செல்வவிநாயகபுரம், பூனைக்குத்தி, காட்டாற்று பாலத்தில் குண்டும் குழியுமாக சாலை இருந்தது. 

இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். பலர் விபத்தில் சிக்கி தவித்தனர். எனவே புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என்ற வாகன ஓட்டிகளின் கோரிக்கை மாலைமலர் நாளிதழில் வெளியானது. இதனை தொடர்ந்து குண்டும் குழியுமான சாலை அகற்றப்பட்டு புதிய தார்சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வந்தது. 

தற்போது பணிகள் முடிந்து சாலை புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. வாகன ஓட்டிகள் சிரமமின்றி சாலையில் சென்று வருகின்றனர்.