பாபநாசம்:
பாபநாசம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி
மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்களுக்கான
விழிப்புணர்வு கூட்டம் பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ்
தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு தலைவர்
குர்ஷிதா பானு, பாபநாசம் பேரூராட்சி கவுன்சிலர்கள்
முத்து மேரி மைக்கேல்ராஜ், சமீரா பர்வீன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகன், வட்டார கல்வி அலுவலர்
இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
முடிவில் தன்னார்வலர் வின்சி. மெட்டில்டா நன்றி கூறினார்.