புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதியுலா. 
உள்ளூர் செய்திகள்

மகாமாரியம்மன் புஷ்ப பல்லக்கில் வீதியுலா

வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் புஷ்ப பல்லக்கு வீதியுலா நடைபெற்றது.

மாலை மலர்

திருவாரூர்  மாவட்டம் வலங்கைமானில் உள்ள மகாமாரியம்மன்

கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் பாடைக்காவடி திருவிழா இந்த ஆண்டு கடந்த 27&ந்தேதி நடைபெற் றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலு த்தினர்.

இந்த நிலையில் நேற்று புஷ்ப பல்லக்கு விழா நடைபெற்றது.

இதையொட்டி கோவிலில் மகாமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பாலாபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை

காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர் கள் பால் காவடி, அலகு காவடி, பால்குடம்,தொட்டில் காவடி எடுத்து வந்து நேர்த் திக்கடன் செலுத்தினர்.

இரவு 10 மணி அளவில் மகாமாரி யம்மன் சிறப்பு

அலங்காரத்தில் புஷ்பபல்லக்கு வீதி உலா நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரமேஷ்,

ஆய்வாளர் ரமணி, மேலாளர் சீனிவாசன், தலைமை அர்ச்சகர்

செல்வம் ஆகியோர் செய்தி இருந்தனர்.

தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் சார்பில் திருவாரூர், தஞ்சை,

கும்ப கோணம், அரியலூர், மன் னார்குடி உள்ளிட்ட வழித்த டங்களில்

சிறப்பு பஸ்கள் இயக் கப்பட்டன. பாதுகாப்பு பணி யில் 300-க்கும்

 மேற் பட்ட போலீசார் ஈடுபட்டனர்.