போலீசார் வாகன சோதனை. 
உள்ளூர் செய்திகள்

சுவாமிமலையில் தீவிர வாகன சோதனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி சுவாமிமலை பேரூராட்சியில்தீவிர வாகன சோதனை நடந்தது.

மாலை மலர்

சுவாமிமலை:

சுவாமிமலை பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் புறவழிச்சாலையில் வாகன சோதனை நடைபெற்றது. 

வாக்காளர்களுக்கு கொடுக்க பணம், அன்பளிப்பு, பொருட்கள் ஏதும் 

கொண்டு செல்லப்படுகிறதா? என்று அனைத்து வாகனங்களையும் முழுமையாக சோதனை செய்தனர். இதேப்போல் வாகனங்களில் ஓட்டுனர் உரிமம், வண்டிக்குறிய அனைத்து சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. 

தொடர்ந்து பல்வேறு இடங்களில் இந்த கண்காணிப்பு பணி தொடர்ந்து 

நடந்து வருகிறது.