குழந்தை ரிஷி 
உள்ளூர் செய்திகள்

சூடான குருமாவில் விழுந்த குழந்தை சாவு

திருவிடைமருதூர் அருகே சூடான பானிபூரி குருமாவில் தவறி விழுந்த குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது

திருவிடைமருதூர் அருகே ஐந்துதலைப்பு வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி அனுஷியா (28). இவர்களது மகன் ரிஷி

வயது2). அனு ஷியா தனது வீட்டு வாசலில் பானிபூரி கடை வைத்து

நடத்தி வருகிறார். முருகேசன் கோவையில் வேலை செய்து வருகிறார்.

கடந்த 27ம் தேதி மாலை பானிபூரிக்கு குருமா குழம்பு தயார் செய்து அந்த

பாத்தி ரத்தை அனுஷியா கீழே வைத்திருந்தார். அப்போது குழந்தை ரிஷி

தவறி சூடாக இருந்த குழம்பில் விழுந்து காயமடைந்து துடித்துள்ளது.

இதனால் பதறிப்போன அனுஷியா குழந்தையை மீட்டு கும்பகோணம்

பகுதி அம்மாசத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்

கொண்டு சேர்த்தார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் ராசா மிராசுதார்

மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை

அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல்

குழந்தை ரிஷி பரிதாபமாக இறந்தது. இதையடுத்து திருவிடை மருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT