மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி. 
உள்ளூர் செய்திகள்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி

தஞ்சையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணியை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் ஆய்வு செய்தார்.

மாலை மலர்

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் 2 மாநகராட்சிகள், 2 நகராட்சிகள் மற்றும் 20 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக கட்சியினர் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் ஆகியவற்றை பொருத்தும் பணி வேட்பாளர்கள் முன்னிலையில் தீவிரமாக நடந்து வருகிறது.

தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த பணிகளை ஆணையர் சரவணகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.‌