தரையில் கோலப்பொடிகளை உபயோகித்து விவசாயிகள், பொதுமக்களுக்கு மாணவிகள் விளக்கமளித்தனர். 
உள்ளூர் செய்திகள்

வேளாண் கல்லூரி மாணவிகள் தினசரி கடிகார வரைபடங்களை வரைந்து விளக்கம்

ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மாணவிகள் தினசரி கடிகார வரைபடங்களை வரைந்து ஊர்மக்களுக்கும், விவசாயிகளுக்கும் விளக்கமளித்தனர்.

தஞ்சாவூர்:

ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் தங்கி வரும் தஞ்சாவூர் வேளாண் கல்லூரியின் இறுதியாண்டு மாணவிகள் தங்களது ஊரக வேளாண் பட்டறிவு முகாமின்போது ஆண்டலாம்பேட்டை கிராமத்தில், ஆண் மற்றும் பெண்களுக்கான தினசரிக் கடிகார வரைப்படம் 

அங்குள்ள மாரியம்மன் கோவில் முன்பாக பலருடைய தோராய தினசரி நடவடிக்கையின் அடிப்படையில் வரைந்து ஆண் மற்றும் பெண் இருபாலரும் இடையே உள்ள தினசரி நடவடிக்கையின் வேறுபாடுகள் பற்றியும் நேரத்தை எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி தரையில் கோலப்பொடிகளை உபயோகித்து அங்குள்ள ஊர்மக்களுக்கும்,  விவசாயிகளுக்கும் விளக்கமளிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT