விரிசல் ஏற்பட்டுள்ள பள்ளி கட்டிடம். 
உள்ளூர் செய்திகள்

திறப்பு விழாவுக்கு முன்பே பள்ளி கட்டிடத்தில் விரிசல்

பேராவூரணியில் பணிகள் முடிந்து திறப்பு விழா காணப்பட உள்ள நிலையில் பள்ளி கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

மாலை மலர்

பேராவூரணி:

பேராவூரணியில் நூற்றாண்டு பழமையான ஊராட்சி ஒன்றியகிழக்கு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் வேண்டுமென பெற்றோர் ஆசிரியர் கழக கோரிக்கையின்படி கடந்த 2018- 19 ஆம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரண்டு வகுப்பறைகள் கட்ட பணிகள் தொடங்கப்பட்டது. 

கொரோனா காரணமாக இடையில் பணிகள் நடைபெறாமல் இருந்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பணி நிறைவு பெற்று, இன்னும் திறப்பு விழா காணப்படாமல் உள்ளது.

இந்நிலையில் பள்ளி கட்டிடத்தின் வகுப்பறை யின் நடுப்பக்க தடுப்பு ச்சுவரில் விரிசல் ஏற்ப ட்டுள்ளது. நடுப்பக்க தடுப்புச்சுவர் பலமில்லாமல் கட்டப்பட்டுள்ளதால் விழுந்து விடுமோ என்ற அச்சம் பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டு மென பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.