உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு தஞ்சையில் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்து கொண்ட செவிலியர்கள். 
உள்ளூர் செய்திகள்

தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - நர்சுகள் சங்க மாநில செயலாளர் பேட்டி

தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தஞ்சையில் நர்சுகள் சங்க மாநில செயலாளர் வளர்மதி பேட்டியளித்துள்ளார்.

மாலை மலர்

தஞ்சாவூர்:

உலக செவிலியர் தின த்தை முன்னிட்டு தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.  

அப்தபோது தமிழ்நாடு நர்சுகள் சங்க மாநில செயலாளர் வளர்மதி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-கடந்த இரண்டு ஆண்டுகளாக உயிரையும் துச்சமாக மதித்து செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை கவுரவிக்க வேண்டும்.

 கொரோனா காலத்தில் பதவி உயர்வு என்பது இல்லாமல் உள்ள நிலையில் அவர்களுக்கு பதவி உயர்வை வழங்க வேண்டும். பெருந்தொற்று காலத்தில் பணியாற்றிய தற்காலிக செவிலியர்கள் அனைவரையும் மீண்டும் பணியமர்த்த வேண்டும். 7 ஆண்டுகளாக தொகுப்பூதிய செவிலியராக பணியாற்றும் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.