தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா மேலஉளூர் கிராமத்தில் பருத்தியப்பர் கோவில் உள்ளது.
இந்த கோயில் தொன்மையும் வளமும் நிறைந்த கோயிலாகும் அங்கு மங்களாம்பிகை உடனுறை பாஸ்கரேஸ்வரர் சுவாமி அருள்பாலித்து வருகிறார் சூரிய கிரகத்தால் ஏற்படும் தோஷத்திற்கு மிகச் சிறந்த பரிகாரத் தலமாகும். இக்கோயில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
கோவில் வளாகம் தூய்மையற்ற நிலையில் இருந்து வந்தது. இதுகுறித்து இந்து சமய அறநிலை துறை அமைச்சருக்கு புகார் மனு தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு சார்பாக அனுப்பப்பட்டது.
இந்த புகார் மனுவின் பேரில் இந்து அறநிலை துறை ஆணையர் மற்றும் இணை ஆணையர் உடனடியாக செயல் அலுவலர் மூலம் கோவிலை சுத்தம் செய்து தூய்மைப்படுத்தினர்.