ஒரத்தநாடு:
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தொண்டராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன். இவரது மனைவி செந்தமிழ்ச்செல்வி (வயது 45). அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் மாடு மேய்த்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அந்த பெண்ணிடம் முகவரி கேட்பது போல் நடித்து அவர் அணிந்திருந்த செயினையும், செல்போனையும் பறித்து கொண்டு தப்பி விட்டனர். இதுகுறித்து செந்தமிழ்ச்செல்வி பாப்பாநாடு போலீசில் புகார் கொடுத்துள்ளார் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 மர்மநபர்களையும் தேடி வருகின்றனர்.
அதேபோல் பாப்பாநாடு அருகில் உள்ள சின்ன குமுளையை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 47). இவர் பாப்பாநாடு கடை வீதியில் நின்று கொண்டிருந்த போது அதே ஊரை சேர்ந்த முத்துபாண்டி என்பவர் குடிபோதையில் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கிவிட்டு ஓடி விட்டார்.
இதுகுறித்து ராமலிங்கம் பாப்பாநாடு போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டியை தேடி வருகின்றனர்.