கும்பகோணம்:
கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள அரசு சமூக வானொலி 90.4யின் 4ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் கல்லூரி 3-ம் ஆண்டு கணிப்பொறியியல் மாணவன் விஜயராகவன் உருவாக்கிய அரசு சமூக வானொலியின் புதிய செயலியை கல்லூரி நிறுவனத் தலைவர் ஆர்.திருநாவுக்கரசு மற்றும் தி.செந்தில்குமார் அறிமுகம் செய்து வைத்து பேசினர்.
நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள், பள்ளிதலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள், வானொலி உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களின் சேவை, திறமையை பாராட்டி சுமார் 32 பேருக்கு அரசு சமூக வானொலியின் சார்பாக விருதுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அரசு இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் மற்றும் அரசு சமூக வானொலியின் இயக்குனருமான முனைவர். தி.பாலமுருகன் தலைமை உரையாற்றி, 2021-ம் ஆண்டு அரசு சமூக வானொலியின் ஆண்டு அறிக்கையும் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் அரசு சமூக வானொலியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர்.இரா.விஜயராகவன் வரவேற்றார். தொழில்நுட்ப பொறியாளர் ஸ்ரீராம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.