புள்ளிமானுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 
உள்ளூர் செய்திகள்

புள்ளிமானுக்கு சிகிச்சை

பேராவூரணி அருகே நாய் கடித்ததில் காயமமைந்த புள்ளி மானுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மாலை மலர்

பேராவூரணி:

பேராவூரணி அருகே உள்ள செருபாலக்காடு கிராமத்தில் புள்ளிமான் ஒன்றை விரட்டிச் சென்று நாய்கள் கடித்துக் குதறி கொண்டிருந்தன. 

பின்னர், கிராம மக்கள் நாய்களை விரட்டிவிட்டு, புதரில்பதுங்கி இருந்த புள்ளிமானை பத்திர-மாக மீட்டு, ஊராட்சி மன்றத் தலைவர் ருக்மணிமணியனிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து அவர் பட்டுக்கோட்டை வன அலுவலகத்திற்கு தகவல் அளித்தார்.  அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த, பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் குமார், வனவர் சிங்காரவேலு,

வனக் காப்பாளர்கள் குமார், சபரிநாதன் ஆகியோர் புள்ளிமானை மீட்டு பட்டுக்கோட்டை வன அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

சுமார் 2 வயது மதிக்கத்தக்க இந்த ஆண்மான் 20 கிலோ எடையுடன் இருந்தது. மேலும், நாய்கள் கடித்ததால் உடல் முழுவதும் காயமாக இருந்தது. 

இதையடுத்து கால்நடை மருத்துவர் மூலம் புள்ளி மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, உணவு, தண்ணீர் வழங்கப்பட்டது. 

மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி உத்தரவின் பேரில், சிகிச்சைக்கு பிறகு கோடியக்கரை காப்புக் காட்டில் மானைக் கொண்டு போய்விட வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்-ளனர். 

இப்பகுதியில், மான்கள் வசிக்கும் காடுகள் இல்லாத நிலையில், புள்ளிமான் எப்படி இங்கு வந்தது எனத் தெரியவில்லை என கிராம மக்கள் தெரிவித்தனர்.