ஒரத்தநாடு:
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூர், ஒக்கநாடு மேலையூர் யாதவர் தெரு, குளமங்கலம் வரையில் செல்லும் மண் சாலை கடந்த 10 மாதங்களுக்கு முன்பு 5 கிலோ மீட்டர் வரை 1-ம் நம்பர் வாய்க்கால் ஒரு பக்க கரையில் தார்சாலை போடுவதாக கப்பியை மட்டும் பரப்பி விட்டு சென்று விட்டனர்.
இப்பகுதி மக்கள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியதால். இப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் பலமுறை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லாததால்.
இப்பகுதி மக்கள் ஒன்றுகூடி ஒக்கநாடு கீழையூர் சாவடியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த ஒரத்தநாடு போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடனடியாக தார்சாலை செப்பனிட்டு தருவதற்கான வேலைகள் உடனடியாக நடைபெறுவதற்கான ஆயத்த பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என்று உத்திரவாதம் அளித்தன் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.