வல்லம்:
தஞ்சையை அடுத்துள்ள வல்லம் பேரூராட்சியில் அதிகளவில் நாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் வாகனங்களில் வருபவர்கள், பொதுமக்கள் மிகவும் அச்சத்துடனே இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வல்லம் கீரைக்கார தெரு- இரட்டை அக்ரஹாரம் சந்திப்பில் அதிக அளவில் நாய்கள் சுற்றித் திரிந்தன.
அதில் வெறிநாய் ஒன்று அப்பகுதியை சேர்ந்த 7 பேரை துரத்தி கடித்துள்ளது. அதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வல்லம் பகுதியில் அதிகளவில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்
என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.