மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கல். 
உள்ளூர் செய்திகள்

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி

தஞ்சாவூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது.

மாலை மலர்

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி சாலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.3 கோடி அளவிலான கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளர் கே.சங்கீதா, துணை பொது மேலாளர் கோடீஸ்வரராவ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சீனிவாசன், கல்யாணபுரம் கிளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மேலாளர் சக்கரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடனுதவி திட்டங்களை வழங்கினர்.

மேலும் மகளிர் நல மேம்பாடு குறித்தும், சமுதாய முன்னேற்றத்தில் மகளிர் பங்களிப்பு குறித்தும் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.