புளியங்குடி நகர்மன்ற தலைவர் விஜயா சவுந்தரபாண்டியன் மரக்கன்று நட்டு வைத்த காட்சி. 
உள்ளூர் செய்திகள்

புளியங்குடி நகராட்சி பகுதியில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டம்

புளியங்குடி நகராட்சி பகுதியில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

புளியங்குடி:

புளியங்குடி நகராட்சி பகுதியில் நகர்புற வேலை வாய்ப்பு திட்டம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக கோட்டை திரடு பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 விழாவிற்கு நகர்மன்ற தலைவர் விஜயாசவுந்தர பாண்டியன் தலைமை தாங்கினார். சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

புளியங்குடி நகராட்சி ஆணையாளர் குமார்சிங் வரவேற்றார். இதில் புளியங்குடி நகராட்சி சேர்மன் விஜயாசவுந்தரபாண்டியன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் முகைதின் அப்துல் காதர், சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள், தூய்மை பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை பாரத இயக்க மேற்பார்வையாளர் விஜய ராணி மற்றும் பரப்புரையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.