செங்கோட்டை:
செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவிகள் லோகேஸ்வரி, சுபஸ்ரீ, ஐஸ்வர்யா, பாத்திமா சைனியா சவுதா அப்ரைன் ஆகியோருக்கு மருத்துவ கல்லூரி படிப்பிற்கு இடம் கிடைத்துள்ளது.
பி.டி.எஸ். படிப்பிற்கு அதே பள்ளியை சேர்ந்த மற்றொரு மாணவி சீதாதேவிக்கு இடம் கிடைத்தது.
இதில் லோகேஸ்வரி மாணவி கூறுகையில்,தமிழக அரசு அறிவித்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் தான் எங்களது மருத்துவ கனவு நிறைவேறியது.
மேலும் செங்கோட்டை நூலகத்தில் நடந்த நீட் மாதிரித் தேர்வில் கலந்து கொண்டது எனக்கு பேருதவியாக விளங்கியது.
தமிழக அரசுக்கும், தனது வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார். செங்கோட்டை நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக மாணவிக்கு பாராட்டுகளையும், பரிசுகளையும் வழங்கினர்.