கலெக்டர் கோபால சுந்தரராஜ் 
உள்ளூர் செய்திகள்

வேட்பாளர்கள் கொரோனா விதிகளை கடைபிடிக்க வேண்டும்-தென்காசி கலெக்டர் அறிவுறுத்தல்

தென்காசி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அரசின் வழிகாட்டு நெறி முறைகளை வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தென்காசி:

தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென்காசி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அரசின் வழிகாட்டு நெறி முறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சாலை நிகழ்ச்சிகள், சைக் கிள், மோட்டார் சைக்கிளில் ஆகிய வற்றின் மூலம் நடத்தப்படும் ஊர்வலம் 11-ந் தேதி வரை தடை செய்யப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் அல்லது போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சம் ஆயிரம் பேர் வரை பொதுக்கூட்டத்தில் கூடலாம்.

உள்ளரங்கில் நடைபெற்றால் 500 பேர் கலந்து கொள்ளும்படி கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் கூட்டங்களுக்கு அனுமதி பெறும் போது அதனை மாவட்ட அளவில் கண்காணிக்க சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.  

வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் போது அவருடன் 20 பேர் மட்டுமே செல்ல வேண்டும்.

இந்த விதிமுறைகளை கடைபிடித்து உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேட்பாளர்கள், பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.