காசநோய் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்ட காட்சி. 
உள்ளூர் செய்திகள்

தென்காசி அரசு மருத்துவமனையில் உலக காசநோய் தின விழா

தென்காசி அரசு மருத்துவமனையில் உலக காசநோய் தின விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மாலை மலர்

தென்காசி:

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக காசநோய் தினவிழா விழிப்புணர்வு பேரணி  தென்காசி மருத்துவமனை நிர்வாகமும், ஸ்ரீ நல்லமணி யாதவா மருந்தாளுநர் கல்லூரியும் இணைந்து நடத்தியது.

பேரணியில் தென்காசி மருத்துவர்கள்,செவிலியர்கள், பயிற்சி மருத்துவர்கள், மருத்துவ மனை பணியாளர்கள் , செவிலியர் பயிற்சி பள்ளி மாணவர்கள் என சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.

பேரணியை, தென்காசி மாவட்ட இணை இயக்குனர் (நலப்பணிகள்)மருத்துவர் வெங்கடரங்கன்  கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.  

அதனைத் தொடர்ந்து தென்காசி மருத்துவ மனை கூட்ட அரங்கில்  மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின்  தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  காசநோய் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி உறைவிட மருத்துவர் ராஜேஷ் தலைமையில் ஏற்கப்பட்டது.  செவிலியர் கண்காணிப்பாளர் திருப்பதி வரவேற்புரை ஆற்றினார். மருத்துவர் மல்லிகா சிறப்புரையாற்றினார்.

 கல்லூரி முதல்வர் வில்லியம், மருத்துவமனை கண்காணிப்பாளர்  ஜெஸ்லின் ஆகியோர்  சிறப்புரை ஆற்றினார்கள். தலைமை மருத்துவமனை குழந்தைகள் பிரிவு தலைவர் கீதா  நன்றி கூறினார்.