சேதமான மின்கம்பத்தை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

சாம்பவர் வடகரையில் அபாய நிலையில் உள்ள மின்கம்பம் சீரமைக்கப்படுமா?

சாம்பவர் வடகரை 6-வது வார்டில் உள்ள சேதமான மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாலை மலர்

சாம்பவர் வடகரை:

சாம்பவர் வடகரை 6-வது வார்டில் உள்ள மெயின் ரோட்டில் மின்கம்பம் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. 2  மாத காலமாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

 அந்த வழியாக பள்ளி மாணவ-மாணவிகள் அதிகமான அளவில் பள்ளிக்கு செல்கின்றனர். எனவே சேதமான இந்த மின்கம்பத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.