மாற்றுத்திறனாளிக்கு பயிற்சி அளித்த போது எடுத்தப்படம். 
உள்ளூர் செய்திகள்

கடையம் அருகே மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

கடையம் அருகே ஏ.பி.நாடானூர் கிராமத்தில் உள்ள ஒரு ஆசிரமத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

நெல்லை:

கடையம் அருகே உள்ள ஏ.பி.நாடானூர் கிராமத்தில் உள்ள ஒரு ஆசிரமத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் அவர்களுக்கான உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கி, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு செயற்கை கால், வீல் சேர் என சுமார் ரூ.1.70 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கினார்.

தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெளிநாட்டை சேர்ந்த எட்மண்ட் பிளம்மர், ஆசிரம இயக்குனர் சந்தோஷ் குமார், துணை இயக்குனர் ஷீலா சந்தோஷ் குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.