கல்லூரியில் புகுந்த மரநாய் குட்டி 
உள்ளூர் செய்திகள்

வாசுதேவநல்லூர் அருகே கல்லூரியில் புகுந்த மரநாய் குட்டி பிடிபட்டது

வாசுதேவநல்லூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் புகுந்த மரநாய் குட்டியை பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

சிவகிரி:

வாசுதேவநல்லூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் உள்ள கழிவறைக்குள் நேற்று மரநாய் குட்டி ஒன்று புகுந்தது. கல்லூரியின் முதல்வர் ஈஸ்வரன் மற்றும் பணியாளர்கள் மரநாய் குட்டியை உயிருடன் பிடித்து புளியங்குடி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சங்கரன்கோவில் வனச்சரகம் வன அலுவலர் உத்தரவின்படி வாசுதேவநல்லூர் பிரிவு வனச்சரகர் அஜித்குமார், வனக்காவலர் குகன் ஆகியோரிடம் கல்லூரியின் முதல்வர் ஈஸ்வரன்  மரநாய் குட்டியை ஒப்படைத்தார்.

வனத்துறையினர் அடர்ந்த வனப் பகுதிக்குள் மரநாய் குட்டியை கொண்டு சென்று விட்டனர்.