சிவகிரி:
சிவகிரி அருகே தேவிபட்டணம் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் கண்ணன் என்பவர் வேன் ஒன்றை விலைக்கு வாங்கி தொழில் நடத்தி வருகிறார்.
இவர் தினமும் தேவிபட்டணம் மந்தையில் வேனை நிறுத்திவிட்டு இரவு வீட்டுக்கு செல்வார். அதனைப் போன்று நேற்று வேனை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றிருந்தார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மங்கலாபுரம் பகுதியை சேர்ந்த அய்யனார் (வயது 21) என்பவர் தேவிபட்டணத்தில் தனியார் தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார்.
இவரும் தேவிபட்டணத்தை சேர்ந்த சசிகுமார் (23) என்பவரும் சேர்ந்து மது குடித்து விட்டு போதையில் தனது கையில் வைத்திருந்த அரிவாளால் மந்தையில் நிறுத்தி வைத்திருந்த வேனின் கண்ணாடியை உடைத்து வேனையும் சேதப்படுத்தினர்.
இது சம்பந்தமாக சுரேஷ் கண்ணன் சிவகிரி போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக அய்யனாரை சிவகிரி போலீஸ் சப்& இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் கைது செய்தார். சசிகுமாரை தேடி வருகின்றனர்.