வீ.கே.புதூர்:
கீழப்பாவூர் பெரிய குளத்தில் கீழப்பாவூர், நாகல்குளம் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் பாலம் அமைப் பதற்கு கடந்த 2019-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
சுமார் 3 ஆண்டுகள் தாண்டியும் பாலம் பணி நிறைவு பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆரம்ப கட்ட பணிகளாக தூண்கள் மட்டுமே இதுவரை அமைக் கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் ராஜன் அரசு அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகளிடம் மழைக்காலம் வருவதற்குள் பணிகள் முழுமையாக நிறைவு பெற துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதில் கீழப்பாவூர் பேரூ ராட்சி செயல் அலுவலர் சாந்தி, பேரூராட்சி துணை தலைவர் ராஜசேகர், பேரூர் தி.மு.க. செயலாளர் ஜெகதீசன்,தங்கேஸ்வரன், ராமச்சந்திரன், தாமோதரன், தெய்வேந்திரன், மாடசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.