தென்காசி:
தென்காசி ஊராட்சி ஒன்றியம் குத்துக்கல்வலசை ஊராட்சி அய்யாபுரம் பகுதியில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார் தொகுதி வளர்ச்சி நிதி ரூ.3 லட்சத்து 35 ஆயிரம் மூலம் அமைக்கப்பட்ட உயர் கோபுரமின் விளக்கு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
குத்துக்கல்வலசை ஊராட்சி மன்ற தலைவர் சத்தியராஜ் தலைமை தாங் கினார். துணைத் தலைவர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஷேக்அப்துல்லா உயர் கோபுர மின் விளக்கினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அய்யாபுரம் தி.மு.க. செயலாளர் செல்வ குமார், குத்துக்கல்வலசை ஊராட்சி தி.மு.க. செயலாளர் காசி கிருஷ்ணன், ஊர் நாட்டாண்மை குருசாமி, நாகராஜ், மல்லிகா வேல்ராஜ், மற்றும் குத்துக்கல்வலசை ஊராட்சி உறுப்பினர்கள் அம்புலி, கண்ணன், இசக்கி தேவி, கலைச்செல்வி, சங்கரம்மாள், மைதீன்பாத்து, சந்திரா, சரவணன், மல்லிகா, கருப்பசாமி, சுப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் குத்துக்கல் வலசை ஊராட்சி மன்ற செயலாளர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.