சிறப்பு அலங்காரத்தில் சுவாமி 
உள்ளூர் செய்திகள்

கடையம் தோரணமலை கோவிலில் தைப்பூச விழா

தென்காசி-கடையம் பிரதான சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச விழா நடைபெற்றது.

மாலை மலர்

பாவூர்சத்திரம்:

தென்காசி-கடையம் பிரதான சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச விழா நடைபெற்றது. 

அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது. காலை 8 மணிக்கு விசேஷ பூஜைகள் மற்றும் வள்ளி தெய்வானை சமேத தோரணமலை முருகன் திருக்கல்யாணம் நடைபெற்றது. 

தொடர்ந்து விடுதலை போராட்ட தியாகிகள் மற்றும் உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டனர். பின்னர் உச்சிகால பூஜை நடைபெற்றன. 

ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் தலைமையில்  பணியாளர்கள் செய்திருந்தனர்.