கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

தென்காசி ஆர்.டி.ஓ. பணி இடமாற்றம்

தென்காசி ஆர்.டி.ஓ. மயிலாடுதுறைக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி:

தமிழகம் முழுவதும் வருவாய் துறையில் பணியாற்றி வரும் 60-க்கும் மேற்பட்ட ஆர்.டி.ஓ.க்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி மதுரை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நடராஜன் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தரணி சர்க்கரை ஆலையின் வடிப்பக அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் ஆர்.டி.ஓ. முத்து மாதவன் தென்காசி கலெக்டரின் நேர்முக (பொது) உதவியாளராகவும், தென்காசி ஆர்.டி.ஓ.ராமச்சந்திரன் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் (பொது) நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் குமார் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT