கடையம்:
ஆழ்வார்குறிச்சி கீழகிராமத்தில் வெங்கடேசபெருமாள் கோவில் உள்ளது. இங்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவி கருடபகவான், ஆஞ்சநேயர், நரசிம்மர், கிருஷ்ணன் உட்பட பரிவார மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர். கோவிலில் கடந்த 10-ந் தேதி ஸ்ரீராமநவமிவிழா தொடங்கியது.
இதைத் தொடர்ந்து தினமும் விஷ்ணு சகஸ்கரநாமம், உபநிஷத் மற்றும் மகளிர் ஸ்தோத்திர பாராயணமும் நடந்தது.நேற்று முன்தினம் மாலை அபுதாபி, பஜன் பாரதி குழுவினரால் திவ்ய நாம சங்கீர்த்தனம் நடந்தது. நேற்று காலை அபுதாபி வெங்கடாசலம் தலைமையில் சிறப்பு உஞ்சவிருத்தி நடந்தது.
இதைத் தொடர்ந்து சிறப்பு வைபவங்களுடன் சீதாகல்யாணத்தை அபுதாபி பஜன்பாரதி குழுவினர் நடத்தினர்.அலங்கரிக்கப்பட்ட ராமர், சீதை, ஆஞ்சநேயர் படத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மாலையில் ஆஞ்சநேயர் உத்ஸவமும், அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகளும்நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.