கடையம்:
கடையம் அருகே கருத்தபிள்ளையூரில் உள்ள அச்சன்குளம் மற்றும் மஞ்சள் ஓடை ஆகிய குளங்கள் மீன் பாசி குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த குளங்களில் மீன்வளத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட தீவனத்தை மீன்களுக்கு போடாமல் ஆடு, மாடு மற்றும் கோழி, பன்றி கழிவுகளை குளத்தில் கொட்டி மீன்களை வளர்த்து வருவதாகவும், இதனால் குளத்தில் உள்ள தண்ணீர் மாசடைந்து காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் அந்த தண்ணீர் மூலம் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கால்நடைகளுக்கு மட்டுமல்லாமல் விவசாயிகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்நடை கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.