கும்பாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்தப்படம். 
உள்ளூர் செய்திகள்

செங்கோட்டை ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம்

செங்கோட்டை ராஜகணபதி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மாலை மலர்

செங்கோட்டை:

செங்கோட்டை சைவ பிள்ளைமார் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட அப்பாமாடசாமி வளாகத்தில் ராஜ கணபதி பிரதிஷ்டை செய்து அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

விழாவில் விக்னேஸ்வர பூஜை, தீபலெட்சுமி பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், சுதர்ஸன ஹோமம், பூரணாகுதியை தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு சேர்வைகாரன் சைவவேளாளர் சமுதாய ஆனந்த விநாயகர் கோவில் வளாகத்தில் ஸ்ரீ ராஜ கணபதியை மேளதாளங்கள் முழங்க அழைத்து வந்தனர். சூரிய சோம கும்ப பூஜை, துவார பூஜை, வேதிக அர்ச்சனை, 2&ம் கால யாகசாலை பூஜை, மூலமந்திர ஹோமம் ரட்சாபந்தனம், திரவியகுதி, மஹா பூர்ணாகுதி, யாத்திரதானம் ஆகியவை நடைபெற்றது.

தொடர்ந்து காலை 9.30க்கு ஸ்ரீ ராஜ கணபதி விமானம் மூலஸ்தானம் குடமுழுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மூலவருக்கு மகா அபிஷேகமும் சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ., நகர்மன்ற சேர்மன் ராமலெட்சுமி, துணைத்தலைவர் நவநீதகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். யாகசாலை பூஜைகளை கணபதி, கங்காதாரன் குருக்கள் குழுவினர் செய்திருந்தனர்.