ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

கீழக்கடையத்தில் வாறுகால் அமைக்கும் பணியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பாரபட்சம் காட்டும் அதிகாரிகள்-பொதுமக்கள் எதிர்ப்பு

கீழக்கடையத்தில் வாறுகால் அமைக்கும் பணியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக கூறி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மாலை மலர்

கடையம்:

 தென்காசி மாவட்டம் கடையம் யூனியனுக்கு உட்பட்டது கீழக்கடையம் பஞ்சாயத்து. இங்குள்ள நாராயணசாமி கோவில் தெருவில் தற்போது பேவர் பிளாக் சாலை மற்றும் வாறுகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இதையடுத்து சாலைகளின் இருபுறமும் உள்ள வீடுகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள படிகள் மற்றும் சறுக்குகள் போன்ற வற்றை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றி வருகின்றனர். ஆனால் அந்த தெருவில் சிலரின் வீட்டு முன் போடப்பட்டுள்ள சறுக்கை மட்டும் அகற்றாமல் உள்ளனர். 

இதுகுறித்து கேட்டால் அவர் வீட்டு முன்பு உள்ள சறுக்குகளை அகற்றாமல் பைப் லைன் மூலமாக சாக் கடைகளை கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளோம் என்று ஒப்பந்ததாரர்கள் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் அதற்கு அடுத்தபடியாக அமைந்துள்ள வீடுகளில் உள்ள படிகளை உடைத்து சேதப்படுத்தியுள் ளனர். இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி யடைந்தனர். இதனால் குறிப்பிட்ட ஒரு சில நபருக்கு சாதகமாக ஒப்பந்ததாரர் செயல்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.  

இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் மற்றும் கடையம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட கலெக்டர்,  இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக அனைத்து வீடுகளின் முன்பும் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுவது மாக உடைத்து எடுத்து விட்டு நல்ல தரமான வாறுகால் அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து உதவி வட்டார வளர்ச்சி அதிகாரி கணேசனிடம் கேட்டபோது, இது தொடர்பாக எனக்கு ஏற்கனவே புகார் வந்துள்ளது. அங்கு பணியில் ஈடுபட்டுள்ள பொறியாளர்களிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளேன். மீண்டும் அவர்களிடம் முழுமை யான விளக்கம் கேட்கப் பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.