செங்கோட்டை:
செங்கோட்டை அரசு பொதுநூலக கட்டிடத்தில் வைத்து செங்கோட்டை நூலகமும் ரெட்போரட் போர்ட்ஸ் அகாடமி சார்பில் சர்வதேச அளவில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப்பதக்கம் மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.
வாசகர் வட்டத்தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆதிமூலம், இணைச்செயலாளர் செண்பகக்குற்றாலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் ராமசாமி வரவேற்று பேசினார்.
கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குத்துச்சண்டை போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.
அதனைத்தொடர்ந்து செங்கோட்டை நகர்மன்ற தலைவி ராமலெட்சுமி, ரூ.5 ஆயிரத்தை வாசகர் வட்டத்தலைவரிடம் வழங்கி நூலக புரவலாக இணைத்து கொண்டு வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் தலைவர் ஷேக்ராஜா, போட்டித் தேர்வு பொறுப்பாளர் விழுதுகள்சேகர், வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார், ஓவியப் பயிற்சி பொறுப்பாளர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முடிவில் வாசகர் வட்ட பொருளாளர் தண்டமிழ்தாசன் சுதாகர் நன்றி கூறினார்.