கடையம்:
தென்காசி மாவட்டம் கீழக்கடையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் விக்டர் துரைசிங் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் ஜெயம் வரவேற்று பேசி வரவு- செலவு அறிக்கைகள் மற்றும் தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில் கடையம் ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளில் இருந்து சட்டவிரோதமாக கேரளாவிற்கு கனரக வாகனங்களில் தினமும் ஆயிரக்கணக்கான டன் கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கீழக்கடையம் பகுதியில் புதிய பஸ் நிலையம், பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம், சிறுவர் பூங்கா, பொதுமக்களுக்கான உடற்பயிற்சி பூங்கா, அரசு கலைக்கல்லூரி, புதிய மின்தகன மையம், ஊராட்சி வருவாய் இனங்களை அதிகரிக்க வணிக வளாகங்கள்,
பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தொழிற்பயிற்சி மற்றும் தொழிற்குழுக்கள் ஏற்படுத்துதல், பள்ளி மற்றும் கல்லூரி முடித்த மாணவ-மாணவிகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் முகாம் நடத்துதல், பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள், இயற்கை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை–வேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் புளிகணேசன், ரம்யா, பனை வாழ்வியல் ஜான் பீட்டர், ரிலையபில் சந்திரசேகர், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், அரசு துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.