செங்கோட்டை-புனலூர் ரெயில் வழிதடத்தில் மின்மய பணிகளை தெற்கு ரெயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு செய்த காட்சி. 
உள்ளூர் செய்திகள்

செங்கோட்டை, பாவூர்சத்திரம்-கடையத்தில் பாலருவி ரெயில் நின்று செல்லக்கோரி மனு

செங்கோட்டை, பாவூர்சத்திரம்-கடையம் ரெயில் நிலையங்களில் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் மதுரை கோட்ட மேலாளரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

மாலை மலர்

செங்கோட்டை:

செங்கோட்டை- புனலூர் ரெயில் வழிதடத்தில் மின்மய மாக்கல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரை தெற்கு ரெயில்வே கோட்ட மேலாளர் ஆனந்த பத்மனாபன் புனலூர், செங்கோட்டை ரெயில் நிலையங்களில் ஆய்வு செய்தார்.

அப்போது செங் கோட்டை ரெயில் பயணி கள் நலசங்கம் சார்பில் ஒரு கோரிக்கை மனுவை வழங்கினர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

பாலருவி ரெயிலை செங் கோட்டை, பாவூர்சத்திரம், கீழக்கடையம் நிறுத்தத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க  வேண்டும்.

பயணிகளின் நலன் கருதி செங்கோட்டை, தென்காசி ரெயில் நிலைய நடைமேடைகளில் லிப்ட் வசதி செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் இன்று வரை  நடக்கவில்லை. அதற்கான பணிகளை விரைந்து எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.